ஜவ்வாது மலை என்பது தமிழ்நாட்டில் உள்ள ஒரு அழகான மறக்க முடியாத இயற்கை வளங்கள் நிறைந்த கொண்ட ஒரு அழகான மலைத்தொடர் ஆகும். இந்த ஜவ்வாது மலைத்தொடர் ஆனது திருவண்ணாமலை வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களை பரவியுள்ள ஒரு அழகான மலைத்தொடர் ஆகும். ஜவ்வாது மலையின் இயற்கை வளமானது அதிக அளவில் மூலிகை தன்மை கொண்ட மலைப்பகுதியாக உள்ளது.
இந்த ஜவ்வாது மலையில் பழங்குடி மக்களின் வாழ்க்கை தனித்துவமாக உள்ளது. இந்த ஜவ்வாது மலை ஆனது தென்னிந்தியாவின் கிழக்கு தொடரில் அமைந்துள்ள ஒரு அழகான மலைத்தொடர் ஆகும். இந்த மலைத்தொடரில் அதிகளவு மருத்துவ குணம் கொண்ட மூலிகை தாவரங்கள் அமைந்துள்ளன.
ஜவ்வாது மலையின் சிறப்புகள் பற்றி பார்ப்போம்:
இயற்கை வளம்:
- ஜவ்வாது மலை ஆனது மிகவும் இயற்கை வளங்கள் அதிக அளவில் நிறைந்து காணப்படுவதுடன் இங்கே அதிக அளவு மருத்துவ குணங்கள் மிக்க தாவரங்கள் அதிக அளவில் காணப்படுகிறது
- இங்கு பறவைகள் விலங்குகள் மற்றும் பூச்சிகள் அதிக அளவில் இருக்கிறது.
- இந்த மலையில் அதிகளவு நீர்வீழ்ச்சிகள் ஆறுகள் மற்றும் குளங்கள் போன்றவை அதிக அளவில் இயற்கையாகவே அமைந்துள்ளது.
- இங்குள்ள நீர்வீழ்ச்சிகள் பார்ப்பதற்கு மிகவும் அழகானதாகவும் இயற்கை வளங்கள் நிறைந்த சூழலாகவும் ஜவ்வாது மலை இருந்து வருகிறது.
- ஜவ்வாது மலையை நீங்கள் ஒரு மறையாவது சென்று வந்தீர்கள் என்றால் நீங்கள் அந்த தருணத்தை உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு அழகான பயணமாக இருக்கும்.
- எனவே நீங்கள் உங்கள் குடும்பத்துடன் ஒரு தடவையாவது இந்த மலையனை சென்று அங்குள்ள இயற்கை வளங்களை ரசித்து வாருங்கள்!
தேன்:
- ஜவ்வாது மலையில் தேன் மிகவும் பிரபலமானது.
- இங்கு தேன் அதிக அளவில் பெட்டிகள் மூலம் தயார் செய்யப்படுகிறது.
- இங்கு மலை தேன் மற்றும் கொம்புத்தேன் ஆகியவை இங்கு அதிக அளவில் இயற்கையாகவே கிடைக்கின்றன.
- நீங்கள் உங்களுக்கு தேன் வேண்டும் என்ற ஜவ்வாது மலைக்கு சென்று இயற்கையாகவே கிடைக்கும் தேனை நீங்கள் வாங்கிக் கொண்டு வரலாம்.
பயிர் வகைகள்:
- ஜவ்வாது மலையில் மூலிகைச் செடி வகைகள் அதிகளவில் இயற்கையாக உள்ளது இங்கு சாமைப் பயிர் ஆனது அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இது உடலுக்கு அதிக அளவில் ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு நெற்பயிராக உள்ளது.
- மேலும் திணை,வரகு,மிளகு,மற்றும் பலா பழமானது இங்கே அதிக அளவில் இருக்கிறது பலா பழம் மேலும் இங்கு பிரபலமாகவும் இருக்கிறது.
- சீதா பழம் ஆனது இங்கு அதிக அளவில் இயற்கையாகவே அதிக அளவில் வளர்ந்து வருகிறது. சாலையின் ஓரங்களில் அதிக அளவில் இந்த மரமானது காணப்பட்டு வருகிறது. இங்கு கிடைக்கும் பெரும்பாலான பழங்கள் இயற்கையாகவே வளர்ந்த மரங்கள் ஆகும்.
- இங்கு அதிக அளவில் நிலத்தடி நீர் கிடைப்பதில்லை எனவே காலநிலைகளுக்கு ஏற்ப கிடைக்கும் நீரை வைத்து பயிர் செய்து வருகின்றனர். இங்கு இயற்கை நிறைந்த மற்றும் சத்துக்கள் நிறைந்த உணவு வகைகள் பயிரிடப்பட்டு வருகின்றன. எனவே நீங்கள் உங்களது தேவையான விதைகளையும் இந்த பெற்று கொண்டு வரலாம்.
கல்வி:
- ஜவ்வாது மலையில் மாணவர்களுக்கு தேவையான பள்ளிகள் மற்றும் விடுதிகளும் சிறப்பாக இருக்கின்றன.
- அதிலும் குறிப்பாக ஜமுனாமரத்தூரில் இருந்து போளூர் செல்லும் வழியில் அத்திப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி மிகவும் புகழ் பெற்ற பிரபல அரசால் அங்கீகாரம் பெற்ற கிறிஸ்துவ தனியார் பள்ளியாகும்.
- இந்தப் பள்ளியில் தான் ஜவ்வாது மலையிலே உள்ள பள்ளிகளில் எங்குமே படிக்காத அளவுக்கு அதிகப்படியான மாணவர்கள் படிக்கிறார்கள்.
- இந்தப் பள்ளியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல ஊர்களில் இருந்தும் மாணவர்கள் வந்து படிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- கல்வியுடன் சேர்த்து ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்கும் இந்த பள்ளியில் தங்கள் குழந்தைகளை படிக்க சேர்ப்பதற்கு பெற்றோர்கள் விரும்புகிறார்கள்.
- அதன்படியே ஒழுக்கத்திலும் கல்வியிலும் மாணவர்களே நல்ல முறையில் வளர்த்தெடுக்கும் இந்த பள்ளிக்கு வருடா வருடம் மாணவர் சேர்க்கை சரமாரியாக நடந்து வருகிறது.
- வெளியூரிலிருந்து வந்து இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்குவதற்கு வசதியாக இங்கு மூன்று தங்கும் விடுதிகள் உள்ளன.
- பெண்கள் தங்கும் விடுதி ஒன்று, ஆண்கள் தங்கும் விடுதிகள் இரண்டு என மூன்று மாணவர்கள் தங்கும் விடுதிகள் அத்திப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ளது.
- எதற்காக ஆண்கள் தங்குவதற்கு இரண்டு தங்கும் விடுதிகள் என்றால் ஒன்றில் வசதி குறைவானது. அதாவது சாப்பாடு வசதிகள் ரேஷன் அரிசியில் தான் பரிமாறப்படுகிறது. அதனால் உணவு கட்டணம் குறைவாகவும் தங்கும் கட்டணம் குறைவாகவும் வசூலிக்கப்படுகிறது.
- ஆனால் மற்றொரு விடுதியில் தங்கும் வசதிகள் மற்றும் உணவுகள் உயர்தர முறையில் வழங்குவதால் அதிகப்படியான உணவு கட்டணம் மற்றும் தங்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
- பாதுகாப்பான முறையில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து கண்காணிப்பு கேமராக்களுடன் மாணவர்களை நல்ல முறையில் பராமரித்து வருகிறார்கள்.
- இங்கு மிகவும் சிறப்பான முறையில் கல்வியறிவு கற்பிக்கப்படுகின்றன. இங்கு ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனி விடுதிகள் மிகவும் சிறப்பான முறையில் கட்டப்பட்டுள்ளன.
- இங்குள்ள பள்ளிகளில் மிகவும் எளிமையாகவும் மற்றும் தெளிவாக புரியும் வகையிலும் கல்வி ஆனது கற்றுக் கொடுக்கப்படுகிறது.
சுற்றுலா இடங்கள்:
- இங்கு பீமன் நீர்வீழ்ச்சியானது மிகவும் சுற்றி பார்க்கக் கூடிய ஒரு இடமாக இருக்கிறது.
- இது மிகவும் பார்ப்பதற்கு அற்புதமான ஒரு நீர்வீழ்ச்சியாக இருக்கிறது.
- மேலும் இந்த பகுதியில் பல்வேறு வகையான நீர்வீழ்ச்சிகள் மற்றும் சுற்றி பார்க்க வேண்டிய பல்வேறு இடங்கள் இருக்கின்றன.
ஜவ்வாது மலையில் ஜமுனாமரத்தூரில் இருந்து அமிர்தி செல்லும் வழியில் உள்ள காவலூரில் உள்ள தொலைநோக்கி ஆனது மிகவும் பிரபலமாக ஒன்றாக இருக்கிறது. காவலூரில் உள்ள வைணுபாப்பு தொலைநோக்கியானது வானியல் அறிஞர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஏற்படுத்திய ஒரு அற்புதமான தொலைநோக்கியாகும். அந்த தொலைநோக்கியானது ஆசிய கண்டத்திலேயே மிகவும் பெரியது என கருதப்படுகிறது. நீங்கள் ஒரு முறையாவது இந்த தொலைநோக்கியினை போய் பாருங்கள்.
ஜவ்வாது மலையில் உள்ள சில கோயில்கள் ஆனது மிகவும் பிரபலமாக உள்ளது எனவே நீங்கள் இங்கு உள்ள கோயில்களுக்கும் சென்று வரலாம். இந்த பகுதியில் கோயில்கள் மிகவும் பழமை வாய்ந்த கோயில்களாகும். எனவே நீங்கள் எங்கு சென்று கோயில்களின் தரிசனம் பெற்று வரலாம்.